Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுட்ட கத்திரிக்காய் துவையல் செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கத்தரிக்காய் பெரியது - 2
வெங்காயம்  -  2
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தாவையான அளவு
உப்பு - ருசிக்குத் தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 4 டீஸ்பூன்
கடுகு - 1/4டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூனிற்கும் குறைவு
மிளகாய் வற்றல் - 4
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
 
கத்தரிக்காயை நன்கு கழுவி துடைத்து அதன்மேல் இலேசாக எண்ணெயைத் தடவவும். இதனை அப்படியே தோலோடு அடுப்பில் வைத்து சுட வேண்டும். மேல் தோல் நன்கு நிறம் மாறும்வரை வைத்து சுட்டு, காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உரித்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உளுத்தம் பருப்பு, மிளகாய், வெந்தயம் இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும். நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும். 
 
இதனுடன் எள், சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய், புளி, வெந்தயம் இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நன்றாக அரைத்த பின் உளுத்தம் பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து உப்பைச் சேர்க்கவும். கடுகு, பெருங்காயப்  பொடியை சேர்த்து எண்ணெயில் தாளித்து கொட்டவும். சுவையான சுட்ட கத்தரிக்காய் துவையல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

அடுத்த கட்டுரையில்
Show comments