Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுலபமான பேல் பூரி செய்ய...!

Advertiesment
பேல் பூரி சமையல்
BY DIGITAL DESK | EDITED BY: PRASHANT PANDEY
PUBLISH DATE: WED, 18 FEB 2026 10:35:04 AM (IST)     UPDATED DATE: WED, 18 FEB 2026 01:44:48 PM (IST)
தேவையான பொருட்கள்:
 
பொரி - 2 கப்
ஓமப்பொடி - 4 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்
வேர்க்கடலை - 4  ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1 
உருளைக்கிழங்கு - 2
புதினா சட்னி - தேவையான அளவு
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
லெமன் சாறு - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - கால் ஸ்பூன்
சாட் மசாலா -  கால் ஸ்பூன்
சீரகப் தூள்  -  கால் ஸ்பூன்
கொத்தமல்லி  - சிறிதளவு
செய்முறை:
 
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, அத்துடன், ஓமப்பொடி, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், மிளகாய்த் தூள், சாட் மசாலா, சீரகத் தூள் என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறி விட்டு, கடைசியாக   எலுமிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் கிளறினால், சுவையான பேல் பூரி தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல நோய்களுக்கு மருந்தாகும் கொத்தமல்லியின் பயன்கள்...!