தேங்காய்ப்பால் பிரியாணி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பிரியாணி அரிசி - 1 டம்ளர் பீன்ஸ்
கேரட் - 3
காலி பிளவர் - 2
பச்சைப் பட்டாணி - சிறிதளவு
உருளைக் கிழங்கு - 3
நெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
முந்திரிப் பருப்பு - 20 
கிராம்பு - 6
லவங்கப்பட்டை - 6
ஏலக்காய் - 6
வெள்ளைப் பூண்டு உரித்தது - 6 பல்லு
பெரிய தேங்காய் - 1/2 மூடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக்  கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 
அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 
பொடித்து வைத்துள்ள மசாலாக்கள் மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதானமாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேகவைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான  தேங்காய்ப்பால் பிரியாணி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments