காராமணி வடை செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
காராமணி - 1 கப்
வரமிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடித்தது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப

செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் காராமணியை போட்டு நீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரவென்று அரைத்துக் கொள்ளவேண்டும்.
 
பின்பு அதனை ஒரு கப்பில் போட்டு, அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து  கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை  உருண்டைகளாக பிடித்து வாழை இலை அல்லது கையில் வைத்து லேசாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான  காராமணி வடை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments