Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா...?

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (13:10 IST)
தேவையான பொருட்கள்:
 
வாழைப்பூ - 1
உருளைக்கிழங்கு - 2
மைதா - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 5 தேக்கரண்டி,
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 6
மிளகுத்தூள் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையானது

 
செய்முறை:

வாழைப்பூவை சுத்தம் செய்து நறிக்கி தண்ணீரில் போடுவதற்கு பதிலாக மோரில் போட்டு வைத்தால், கருத்து போவதை தடுக்கலாம். வாழைப்பூவை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
 
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வாழைப்பூ, மைதா, வெங்காயம், ப.மிளகாய், கடலைமாவு, மிளகுத்தூள், கறிவேப்பிலை, சீரகம் முதலியவற்றுடன் அளவாக உப்பையும் போட்டு  எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மாவில் தண்ணீர் சேர்க்க கூடாது. மாவு தளர்வாகி விட்டால் சிறிது கடலை மாவை சேர்த்து கொள்ளலாம். மாவை சிறு சிறு  உருண்டைகளாகச் செய்து கொள்ள வேண்டும்.
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள மாவை வேண்டிய வடிவில் தட்டி எண்ணெயில்  போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சுவையான வாழைப்பூ கட்லெட் ரெடி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments