Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பக் காலத்தில் சாப்பிடவேண்டிய உணவு முறைகள் என்ன....?

Webdunia
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்து அதிக அளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக்  கொள்வது அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம்  இதில் குழந்தைக்கு கிடைத்துவிடும்.
 
கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.
தலைவலி, காய்ச்சல், சளி, பல் வலி போன்றவைக்கு மருத்துவரிடம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு தன்மை உள்ள  பழங்கள் காய்கள் உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டாம்.
 
சாப்பிட கூடாத பழங்கள் கொய்யா, பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை. தினம் சாப்பிட வேண்டிய பழங்கள் ஆப்பிள், பச்சை திராட்சை,  மாதுளை, ஆரஞ்சு.
 
இறால், சிக்கன் போன்றவை கூட அதிகம் சூடு நிறைந்தவை. எனவே தவிர்ப்பது நல்லது. சிக்கன் நிறைய தயிர் சேர்த்து செய்து கொஞ்சமாக  சாப்பிட்டு கொள்ளலாம்.
 
நெல்லிக்காய் நிறைய வாங்கி சர்க்கரை பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை வேகவைத்து பாகில் ஊறவைத்து தினம் ஒன்று சாப்பிடலாம். பெருங்காயம், பூண்டு சோம்பு சிறிது குறைத்து பயன்படுத்தவும்.
 
புரோக்கோலி மற்றும் ஸ்பினாச் கீரையில் அதிக அயர்ன் இருக்கு. இவை இரண்டையும் அடிக்கடி சமைத்து உண்ணலாம். ஸ்பினாச் சூப் கூட  செய்து குடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடிக்கடி முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ ஒரு சுலபமான தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments