Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சினிமா- எ குயட் ப்ளேஸ்

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (17:21 IST)
ஜான் க்ராஸின்ஸ்கி இயக்கி, நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் எ குயட் ப்ளேஸ் (A quiet place). இப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

 
 
இந்த படத்தின் கதைக்களம் 2020ல் நடக்கிறது. அப்போது அங்கு வாழும் மனிதர்களை ஒரு விதமான பிராணிகள் கொன்று வருகிறது. இதில் இருந்து தப்பித்து எமிலி ப்ளண்ட், ஜான் க்ராஸின்ஸ்கியின் மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் மட்டும் அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
 
இவர்கள் இந்த பிராணிகளிடம் இருந்து தப்பிக்க சத்தம் போடாமல் சைகை காட்டும் மொழியின் மூலம் பேசிக்கொண்டு, அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். ஏனென்றால், அந்த பிராணிகளுக்கு கண் பார்வை கிடையாது வேறும், மனிதர்கள் ஏற்படுத்தும் சத்தத்தை வைத்து இந்த பிராணிகள் மனிதர்களை வேட்டையாடும். ஒரு நாள் எமிலி ப்ளண்ட், ஜான் க்ராஸின்ஸ்கியின் மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் பாலத்தை கடந்து சென்று கொண்டிருப்பார்கள். அப்போது அவரது 4வயது குழந்தை  தன்னிடம் இருந்த ஹெலிகாப்டர் பொம்யை ஆன் செய்து விடும் அதனால் சத்தம் ஏற்படும். இதனால் அந்த பிராணிகள் குழந்தையை கொடூரமாக கொன்றுவிடும்.
 
இந்த பிராணிகளிடம் இருந்து தப்பிக்க கருவிகள் சிலவற்றை தன் வீட்டில் கண்டுபிடித்து வைத்திருப்பார் ஜான் க்ராஸின்ஸ்கி. ஒருநாள் அவரது மனைவி எமிலி ப்ளண்ட் வீட்டில் பிரசவ வழியில் துடித்து கொண்டிருக்கும் போது ஒரு பொருளை கீழே தள்ளி வீட்டு விடுவார். இதனால் சத்தம் ஏற்படும் உடனேயே அந்த வீட்டிற்குள் பிராணிகள் நுழைந்து விடும் பின்னர் ஜான் க்ராஸின்ஸ்கி தன் மனைவியை காப்பாற்றி வீட்டின் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்றுவிடுவார்.
 
இந்த சமயத்தில் அவர்களின் இரண்டு குழந்தைகளும் வெளியே பிராணிகளிடம் மாட்டிக்கொள்ளும். அப்போது அந்த பிராணிகளிடம் இருந்து தனது குழந்தைகளை காப்பாற்ற தனது உயிரை மாய்த்து கொள்வார் ஜான் க்ராஸின்ஸ்கி . பிறகு இந்த பிராணிகளிடம் இருந்து எமிலி ப்ளண்ட் தனது இரண்டு குழந்தைகளையும் எப்படி காப்பாற்றினார் என்பது தான் எ குயட் ப்ளேஸ் (A quiet place) படத்தின் க்ளைமேக்ஸ்.
 
படத்தின் திரில்லர் காட்சிகளில் வரும் பின்னனி இசையை மிக கச்சிதமாக இசைத்துள்ளார் மார்கோ பெல்ட்ராமி. படத்தின் வரும் அனைத்து காட்சிகளை தத்ரூபமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜான் க்ராஸின்ஸ்கி. இவர் இயக்கத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலுல் சிக்சர் அடித்துள்ளார். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் மொமண்டாக இருக்கும். படத்தின் திரைக்கதை அழகாக வடிவமைத்தது மட்டுமல்லாமல் அதற்கான கதாபாத்திரங்களை அழகாக தேர்வு செய்துள்ளார் இயக்குனர். ஹாரர், திரில்லர் ஜானர் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments