கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமத்ரா தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த 'லயன் ஏர்' என்ற விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கடலுக்குள் விழுந்து சிதறியது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 188 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று கண்டறிய உதவும் கருப்புப்பெட்டி இதுவரை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் இன்று விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த கருப்புப்பெட்டி குறித்த விஷயம் ஊகமாக இருந்து வந்த நிலையில தற்போது இந்தோனேஷிய அமைச்சர் சுமாடி இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
மேலும் இந்த கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்கள் கிடைக்க குறைந்தது 3 வாரங்கள் ஆகும் என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.