Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 19 பேர் உடல் கருகி பலி

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (11:01 IST)
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

 
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். காயமடைந்த மேலும் 32 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19 மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் பாதிக்கப்பட்டவர்களைக் காண முடிந்ததாக தீயணைப்புத் துறை ஆணையர் டேனியர் நீக்ரோ தெரிவித்தார்.
 
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத உயிரிழப்பு இது எனவும் அவர் கூறினார். மூன்றாவது தளத்தில் இருந்து தீப் பிடிக்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில நாள்களுக்கு முன் பிலடெல்பியாவின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!

தங்கத்தை விற்க ஏடிஎம் மிஷின்.. 30 நிமிடங்களில் வங்கி அக்கவுண்டில் பணம்..!

வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் 2200 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை..!

2வது நாளாக ஏற்றம் காணும் பங்குச்சந்தை.. இன்றே 80 ஆயிரத்தை தாண்டுமா சென்செக்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments