Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் அச்சுறுத்தல்; 3 நாளில் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து! – பயணிகள் வேதனை!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (08:23 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பால் கடந்த மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஒமிக்ரானால் விமான நிறுவனங்கள் மீண்டும் நஷ்டத்தை சந்திக்க தொடங்கியுள்ளன. பல நாடுகளில் ஏற்கனவே சில நாடுகளில் இருந்து விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விமான சேவைகளும் ஒமிக்ரான் பாதிப்பால் ரத்தாகி வருகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கு முதல் நாள் என கடந்த மூன்று நாட்களுக்குள் உலகம் முழுவதும் 6 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் விமான ஊழியர்களுக்கு ஒமிக்ரான் உறுதியானதால் 200க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை சீனா மற்றும் அமெரிக்கா சார்ந்த விமான நிறுவனங்களுடையவை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments