Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BRICS கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள்- தென்னாப்பிரிக்க அதிபர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (17:33 IST)
தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா, பிரிக்ஸ்-ல் உறுப்பு நாடுகளாக மேலும்  6 நாடுகளை  இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக   அறிவித்துள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஆகிய நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.

இந்த அமைப்பின் சார்பில் 15வது உச்சி மாநாடு ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில்,  நேற்று முன்தினம்  தொடங்கியது.இதில்,  பங்கேற்க இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சென்றுள்ளனர்.

ஏற்கனவே பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, இந்த பிரிக்ஸ்-ல் உறுப்பு நாடுகளாக உள்ள நிலையில், மேலும்,  6 நாடுகளாக இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா அறிவித்துள்ளார்.

அதில், அர்ஜெண்டினா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

மேப்ல பாகிஸ்தானே இல்லாம போயிடும்! எல்லையை பிடிக்க போர் நடத்தல! - அண்ணாமலை ஆவேசம்!

முதல்வர் ஸ்டாலினின் ‘ஒற்றுமை பேரணி’.. மெரினாவில் போக்குவரத்து மாற்றம்..!

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

அடுத்த கட்டுரையில்
Show comments