துபாயில் பற்றி எரியும் 67 மாடி கட்டிடம்.. 3,800 பேரின் நிலை என்ன? - அதிர்ச்சி வீடியோ!

Prasanth K
ஞாயிறு, 15 ஜூன் 2025 (10:42 IST)

துபாயில் ஏராளமான மக்கள் வசித்து வந்த புகழ்பெற்ற டைகர் டவர் என அழைக்கப்படும் மரினா பினாக்கிள் கட்டிடம் முழுவதுமாக தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

67 அடுக்குகள் கொண்ட மரியா பினாக்கில் கட்டிடத்தில் 764 அபார்ட்மெண்ட்களில் 3,800க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் விரைந்து வந்த மீட்பு படையினர் அபார்ட்மெண்ட்களில் இருந்த மக்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டு தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 

ஆனால் கட்டுக்கடங்காத தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியதால் மொத்த டவருமே பற்றி எரிந்து வந்துள்ளது. தொடர்ந்து துபாய் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பலரும் விரைந்து வந்து 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மொத்த டவரின் பெரும்பான்மையான பகுதிகள் தீக்கு இரையாகியிருந்தது.

 

இந்த பெரும் தீ விபத்தில் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தாலும், தவறுதலாக யாராவது உள்ளே இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளதாகக் கூறப்படுகிறது. தீயை அணைத்த பின் கட்டிடத்தில் நடைபெறும் சோதனையில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என தெரிய வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் டைகர் டவர் பற்றி எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments