Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபர் அதிரடி கைது

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (08:13 IST)
பாரீஸில் வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 
பிரான்ஸில் நபர் ஒருவர் வீட்டில் சிங்கக்குட்டியை வளர்த்து வந்துள்ளார். அந்த சிங்கக்குட்டி பிறந்து 6 வாரங்களே ஆகிறது. அந்த நபர் வீட்டில் சிங்கக்குட்டியை வளர்த்து வருவதையறிந்த பக்கத்து வீட்டார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மீட்புத் துறையினர் உதவியோடு அந்த சிஙக்குட்டியை மீட்டனர். அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் அந்த சிங்கக்குட்டியை 11 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 14 ஆயிரம்) விற்க முயற்சித்தது தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். மேலும் அந்த சிங்கக்குட்டியை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments