Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலந்தியை கொல்ல வீட்டை தீயிட்டு கொளுத்திய நபர்

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (14:53 IST)
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் சிலந்தி பூச்சியை தீயிட்டு கொல்ல முயன்ற நபரின் வீடு முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த நபரின் வீட்டில் மிகப்பெரிய சிலந்தி பூச்சி இருந்துள்ளது. இதனைப்பார்த்த அந்த நபர் சிலந்தியை அடித்து கொல்ல முயன்றார். அது தப்பித்துக் கொண்டே இருந்தது. எனவே பர்னர் மூலம் சிலந்தியை தீயிட்டு கொல்ல முயன்றார்.
 
அப்போது வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஸ்கிரீனில் எதிர்பாராதவிதமாக தீ பரவியது. பின்னர் தீ வீடு முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments