Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜநாகத்தை சீண்டிய வாலிபர்: கடைசியில் நேர்ந்த விபரீதம்

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (12:58 IST)
தாய்லாந்தில் ராஜநாகத்தை வைத்து வித்தை காட்டிய வாலிபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதிலும் உலகின் மிகக்கொடிய விஷம் கொண்ட பாம்பு என்றால் அது ராஜநாகம் தான். அதன் நீளம், அதன் தோற்றம் பார்ப்பவர்களை கதிகலங்க வைக்கும்.
 
இந்நிலையில் தாய்லாந்தில் வாலிபர் ஒருவர் ராஜநாகத்தை கையில் வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தார். ஆபத்தை உணராத அவர் பெருமையோடு அந்த பாம்பிடம் விளையாடிக்கொண்டிருந்தார்.
 
ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமடைந்த பாம்பு, அவரது கையில் கடித்து விட்டது. உடனடியாக அந்த பாம்பை அவர் கீழே வீசினார்.
 
இதனையடுத்து அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தை உணராமல் வெட்டி விளம்பரத்திற்காகவும், த்ரில்லுக்காகவும், பந்தாவிற்காகவும் அந்த இளைஞர் செய்த செயல் அவரது உயிருக்கே உலை வைத்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments