Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (09:51 IST)
டென்மார்க் வணிக வளாகம் ஒன்றில் இளைஞர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில் விமான நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான மக்கள் அந்த வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து வந்துள்ளனர்.

அப்போது வணிக வளாகத்திற்குள் புகுந்த 24 வயது இளைஞர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்குள்ளவர்களை சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த இளைஞரை வளைத்து பிடித்து கைது செய்த போலீஸார் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments