Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பிஸி!. ஆனாலும் அவர் இங்கே வருவது ஹேப்பி!.. அஜித் நெகிழ்ச்சி...

Advertiesment
ajith vijay
விஜயும் அஜித்தும் பல வருடங்கள் திரையுலகில் போட்டி நடிகர்களாக வலம் வந்தவர்கள். விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் கடுமையாக சண்டை போடுவார்கள். தற்போது முதல்வர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்டார். ஒருபக்கம், அஜித் கடந்த சில வருடங்களாகவே கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் சட்டசபையில் பேசிய விஜய் தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதற்கு அஜித்குமார் நன்றியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், முதல்வர் விஜய் ஒரு வார பயணமாக லண்டன் சென்றுள்ளார். அதோடு, நாளை அஜித் கலந்துகொள்ளும் சில்வர் ஸ்டோன் ரேஸிங் போட்டியை விஜய் தொடங்கி வைக்கிறார். கடுமையான மணிச் சூழலுக்கிடையே முதலமைச்சர் விஜய் இங்கு வந்துள்ளார். எனக்கு லண்டனில் நடப்பது போல போட்டிகள் சென்னையிலும் நடைபெறவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது’ என சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஜித் ‘திரைத்துறையில் நாங்கள் சக நடிகர்களாக இருந்தோம்.. என்னுடைய அழைப்பின் பேரில் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரை தொடங்கிவைக்க முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாடுக்காக முதல்வர் விஜய் எடுக்கும் முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல!.. தவெகவை பொளக்கும் பழனிச்சாமி!...