Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லண்டனில் 38, 44வது இடங்களை பிடித்த அஜித்திம் டீம்!.. இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா!..

Advertiesment
vijay ajith
நடிகர் அஜித்குமார் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். இளம் வயதிலிருந்து அஜித்திற்கு கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. ஆனால் பல வருடங்களாக அவரால் அதில் ஈடுபட முடியவில்லை. தற்போதுதான் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

கார் ரேஸில் ஈடுபடும் அஜித் அதில் கிடைக்கும் இடைவெளியில் மட்டுமே சினிமாவில் நடித்தார். அப்படி விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய திரைபப்டங்கள் வெளியானது. இதில் குட் பேட் அக்லி ஹிட் படமாக அமைந்தது. ஆனால் ஒரு வருடமாகியும்  அடுத்த படம் துவங்கப்படவில்லை. புது படம் டேர் டெவில் அறிவிக்கப்பட்டு அறிவிப்போடு நின்றுவிட்டது. அதாவது படத்தின் ஷூட்டிங் தற்போதுவரை துவங்கப்படவில்லை.

இந்நிலையில் தான் நேற்று லண்டனில் சில்வர் ஸ்டோன் சர்க்யூட்டில் கார் ரேஸ் நடைபெற்றது. இதில் அஜித்தின் டீமும் கலந்து கொண்டது.. ஒருபக்கம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தார். நேற்று அஜித்தின் டீம் கலந்து கொண்ட அந்த கார் ரேஸ் போட்டியை அவர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

எனவே நேற்று மாலை முதலே அஜித்தும் விஜயும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. ஆனால், லண்டனில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 38 மற்றும் 44வது இடங்களை பிடித்திருக்கின்றன. இதையடுத்து, இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா என திமுக ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் தினங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலீட்டை ஈர்க்க விஜய் லண்டன் போகல.. வேற ஒன்னு ஓடிக்கிட்டிருக்கு!.. பழனிச்சாமி நக்கல்!...