Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்கதான் எங்களுக்கு காசு கொடுக்கணும்!.. இழப்பீடு கேட்ட ஈரானுக்கு டிரம்ப் பதிலடி...

Advertiesment
donald
ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை துவங்கியது. ஆனால் ஈரானை அமெரிக்காவில் வழிக்கு கொண்டு வர முடியவில்லை. அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஈரான் அடிபணியவில்லை.

அதோடு அமெரிக்காவுக்கு உதவும் சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அபுதாபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலையும் நடத்தியது. மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது.

இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்ல முடியாததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலையும் பல நாடுகளிலும் உயர்த்தப்பட்டது. இது அமெரிக்காவுக்கு பெரிய பிரச்சனையை கொடுத்தது..

இந்நிலையில் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு கொடுக்க வேண்டும் என ஈரான் கேட்டிருக்கிறது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் ஈரானால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களின் குடும்பங்களுக்கு ஈரான் இழப்பீடு கொடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் கூறியுள்ளார். மேலும் ஜெனரல் சுலைமானி தலைமையிலான தாக்குதல்கள், USS கோல் கப்பல் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட சம்பவங்களை குறிப்பிட்டு இதற்கெல்லாம் ஈரான் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் ரேபிடோ டிரைவர்.. நள்ளிரவில் இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர்.. அதன்பின் நடந்த பரபரப்பு சம்பவம்..