Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இன்னொரு ஏஐ அறிமுகம்.. ஒரே வாரத்தில் ஓரம் கட்டப்பட்டதா டீப் சீக்?

Mahendran
வியாழன், 30 ஜனவரி 2025 (14:32 IST)
சீனாவின் டீப் சீக் என்ற  ஏஐ, சாட் ஜிபிடி, ஜெமினி ஆகியவற்றையெல்லாம் ஓரம் கட்டி விட்டு உலகின் முன்னணி இடத்தை பிடித்ததாக கூறப்படும் நிலையில் சீனாவின் இன்னொரு ஏஐ அறிமுகம் ஆகி இருப்பதாகவும் அது டீம் சீக்-ஐ விட நல்ல ரிசல்ட் தருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் Qwen 2.5-Max என்ற ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது. சாட்ஜிபிடி மற்றும் டீப்சீக்-ஐ விட இது சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அலிபாபாவின் கிளவுட் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் "Qwen 2.5-Max என்ற ஏ.ஐ. மாடல் GPT-4o, DeepSeek-V3 மற்றும் Llama-3.1-405B ஐ விட சிறப்பாக செயல்படும் என கூறியுள்ளது.  

உலக அளவில் ஏ.ஐ. தளத்தில் டீப் சீக்  ஏ.ஐ. மாடல்  மிக குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி பெற்ற செய்த நிலையில், அலிபாபா வெளியிட்ட இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 20-ம் தேதி டீப் சீக் வெளியிடப்பட்ட நிலையில், டீ சீக் நிறுவனத்தின் R1 ஏ.ஐ. மாடல் சிலிகான் வேலியை ஆட்டம் காண செய்தது. இந்த நிறுவனத்தால் தான் அமெரிக்க பங்குச்சந்தையே சரிந்தது.

இந்த நிலையில் டீ சீக் போட்டியாக அதே சீனாவில்  அலிபாபாவின் Qwen 2.5 Max ஏ.ஐ. மாடல்  அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் இதனை பின்னுக்கு தள்ள இன்னொரு ஏஐ மாடல் வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 கிலோ மீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசை.. திருப்பதியில் கட்டுக்கடங்கா கூட்டம்..!

நாளை முதல் அக்னி நட்சத்திரம்.. மழையும் பெய்ய வாய்ப்பு என தகவல்..!

மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. 14 தமிழக மீனவர்கள் காயம்..!

கோவா கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல். பரிதாபமாக பலியான 6 பேர்!

நாளை நடைபெறுகிறது நீட் தேர்வு.. மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments