Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (11:59 IST)
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் 6 கட்சிகள் இணைந்து தீர்மானமொன்றை இயற்றியதாக செய்திகள் வெளிவந்தது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடக்கூடாது என்றும் கண்டித்தது 
 
இந்த நிலையில் 6 அரசியல் அமைப்புகள் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் உள்ள சில அரசியல் குழுக்கள் சேர்ந்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாகவும், உண்மையில் இது  28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரபூர்வ முடிவு அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments