Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாள் ஒரே மருத்துவமனையில் பிறந்து காதலர்களான ஜோடி! ஒரு நிஜ 'குஷி' கதை

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (12:09 IST)
ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த இரண்டு குழந்தைகள் 18 வருடங்கள் கழித்து காதலர்களாகவும், 26 வருடங்கள் கழித்து தம்பதிகளாகவும் மாறிய அதிசய நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது
 
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி லண்டன் மருத்துவமனை ஒன்றில் இரண்டு குழந்தைகள் சில நிமிட  நிமிட இடைவெளியில் பிறந்தன. பிறக்கும்போது இந்த இரண்டு குழந்தைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் விதி இந்த இரண்டு குழந்தைகளை 18 வருடங்கள் கழித்து காதலர்களாக சேர்த்து வைத்துள்ளது.
 
ஆம் ஷவுனா கிரேஸி, டாம் மாகிர் என்ற காதலர்கள் தற்செயலாக ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் வகையில் தங்கள் பிறப்பை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது இருவரும் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்தது தெரியவந்தது. இதனால் அதிசயித்த இந்த காதல் ஜோடி, தாங்கள் இறைவனால் சேர்க்கப்பட்ட ஜோடி என்று கூறி பெருமைப்பட்டு கொண்டனர். எட்டு வருடங்கள் காதலர்களாக இருந்த இந்த ஜோடி தற்போது தங்களது 26வது வயதில் தம்பதிகளாகியுள்ளனர். ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்து இன்று தம்பதிகளாகியிருக்கும் இந்த ஜோடி இணையத்தில் வைரலாகியுள்ளனர். 

விஜய் நடித்த 'குஷி' படத்தில் விஜய்யும் ஜோதிகாவும் ஒரே நாளில் பிறந்து பின்னாளில் காதலர்களாக மாறுவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments