Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையிலிருந்து தப்ப தனது மகளை போல மாறிய கைதி..

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (17:31 IST)
பிரேசில் நாட்டில் சிறை கைதி ஒருவர், தனது மகளைப் போல வேடமிட்டு தப்ப முயன்றுள்ளார்.

பிரேசில் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிளாவினோ டா சில்வா, ஒரு கேங் லீடர் ஆவார். அவருக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். சில்வாவை அவரது மகள் சிறையில் அடைக்கப்பட்ட தனது தந்தையை சந்திக்க வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் தனது தந்தையை பார்க்க வந்தபோது, தந்தை ஒரு திட்டம் தீட்டியிருப்பதை மகள் அறிந்திருக்கவில்லை.

தன்னை பார்க்க வந்த மகளை சிறையிலேயே விட்டுவிட்டு, திட்டமிட்டபடி தனது மகளைப் போலவே உடை, மாஸ்க் மற்றும் விக் என அனைத்தையும் தயாராக வைத்துள்ளார். பின்பு மகளைப் போலவே வேடமணிந்து, மகளை சிறையிலேயே விட்டுவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் போலீஸார், சில்வாவின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வந்துள்ளது. முழுவதுமாக தனது மகளைப் போலவே மாறிய கைதியை போலீஸார் மடக்கி பிடித்தனர். மேலும் இதை விட அதிக பாதுகாப்பு உள்ள தனிச்சிறையில் சில்வாவை மாற்ற உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments