தேர்தலில் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் கழிவறைகளை சுத்தம் செய்துள்ளனர் வேட்பாளர்கள்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரும் 9 ஆம் தேதி அதிபர் தேர்தல் , பாராளுமன்றத் தேர்தல் கவர்னர் உள்ளிட்ட தேர்தல் ஒரே நேரத்தில் நடக்கவுள்ளது.
இத்தேர்தலுக்கான பிரச்சாரம் சமீபத்தில் தொடங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விதவிதமான யோசித்து வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், இதுவரை எந்தவொரு நாட்டிலும் இல்லாதவகையில், வேட்பாளர்கள, பொதுக் கழிவறைகளைச் சுத்தம் செயவதும், சமையலுக்கு காய்கறிகளை நறுக்குவதும், மதுபான பார்களில் பரிமாறுவதுமாக செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
கென்யா வேட்பாளர்களின் இந்த தேர்தல் பிரச்சார புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.