Publish Date: Mon, 09 Nov 2026 (10:32 IST)
Updated Date: Mon, 09 Nov 2026 (10:36 IST)
என்னதான் மனிதர்கள் வசிப்பதற்கு பூமி உகந்த கிரகமாக இருந்தாலும் பல இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு அவ்வப்போது இயற்கையை மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட நேபாளத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு வெள்ளத்தில் சிக்கி பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேரை காணவில்லை.
இந்நிலையில்தான் ஈரானின் சாக்ரோஸ் மலைகளுக்கு அடியில் உள்ள அரேபிய புவித்தட்டில் இரண்டு பெரிய விரிசல்களை சீன அறிவியல் அகாடமி கண்டுபிடித்துள்ளது. கடல் தட்டுப் பாறைகள், நிலப்பரப்பு தட்டு பாறைகளுக்கு அடியில் தள்ளப்படுவதால் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இவை எதிர்காலத்தில் ஒன்றாக இணையக்கூடும் என்பதால் பூமிக்கு அடியிலிருந்து எரிமலைக் குழம்பு வெளியேறி புதிய எரிமலைகள் உருவாக்கலாம் என அந்த அகாடமி தெரிவித்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க