Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

6 நாட்களில் புது மருத்துவமனை சாத்தியமா? தீவிரம் காட்டும் சீன அரசு!

6 நாட்களில் புது மருத்துவமனை சாத்தியமா? தீவிரம் காட்டும் சீன அரசு!
, சனி, 25 ஜனவரி 2020 (10:50 IST)
ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மருத்துமனையை கட்ட சீன அரசு பணிகளை முடுக்கியுள்ளது.
 
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மருந்துவ அவசரநிலையை அறிவிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
 
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை 26 பேர் இந்த வைரஸால் இறந்துள்ள நிலையில் இறந்தவர்களில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாம்பு மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில் ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பதாலேயே வைரஸ் பரவி விடும் அபாயம் இருப்பதாக சீன மருத்துவ ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.
 
வைரஸ் பரவிய வுகான் மற்றும் சுற்றியுள்ள 12 நகரங்களில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் வைரஸ் தாக்குதலால் பாதிகக்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு மருத்துவமனை ஒன்றை துரிதமாக கட்டி வருகிறது.
 
1000 படுக்கைகள் கொண்ட மருத்துஅவ்மனையை 6 நாட்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பணி நடந்து முடிந்தால் வரும் பிப்.3 ஆம் தேதி மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும். PreFabricated Building என்ற முறையில் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படையினருக்கு மூளை பாதிப்பு