கடந்த மார்ச் மாதத்தில் விண்வெளிக்கு சென்ற வீரர்கள் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களால் பூமிக்கு திரும்ப முடியாமல் இருந்த நிலையில் நேற்று பூமியை வந்தடைந்தனர்.
உலக வல்லரசு நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்த விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறாக விண்வெளி ஆராய்ச்சிக்காக இந்தியா வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், அவருடன் பட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அதற்கு முன்னதாக 4 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் உருவான மில்டன் புயல், போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் ஆகியவற்றால் பூமிக்கு திரும்புவதில் தாமதமானது.
இந்த நான்கு வீரர்களுடன் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோரும் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அழைக்க சென்ற விண்கலத்தில் முதலில் சென்ற Crew 8-ன் நான்கு வீரர்கள் மட்டுமே பூமிக்கு திரும்பியுள்ளனர்.
8 நாட்கள் பணியாக சென்ற சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி ஆராய்ச்சி 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டதால் அவர் இந்த வீரர்களுடன் திரும்ப வரவில்லை என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K