Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணாடி ஜன்னலை தாண்டி முதியவரின் கையை கடித்த முதலை !

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (21:30 IST)
ஸ்வீடனில் நாட்டில், கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ வழங்கிய முதலை ஒன்று முதியவரின் கையை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1970களில், ரஷ்ய விண்வெளி வீரர் விளாடிமிர் ஷடலோவுக்கு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கியூபா ‘‘காஸ்ட்ரோ & ஹிலாரி என்ற இரு முதலைகளை பரிசாக அளித்தார். 
 
அதன்பிறகு  இவ்விரு  முதலைகளும் மாஸ்கோ விலங்கியல் பூங்காவில் முறையாக  பராமரிக்கபட்டு வளர்க்கப்பட்டு வந்தது. 
 
இதனையடுத்து இங்கு வளர்ந்த முதலைகள் இரண்டும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்கான்சென் ஆக்வரியம் என்ற இடத்திற்கு  மாற்றப்பட்டு, அங்கு நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. மக்களும் அதை பார்த்து போட்டோ எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில் இங்கு ஒரு  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்கேற்க வந்த 70 வயது தாத்தா ஒருவர், தன் கையிரண்டை  பின்னால் கட்டிக்க்கொண்டு  உற்சாகமாக பேசிக்க்கொண்டிருந்தார். அப்போது,  அவரது பின்னால் இருந்த கண்ணாடிக் கதவுகளீல் இருந்து வெளியே தலை நீட்டிய ஒரு முதலை  அவரது கையை கடித்தது.
 
இந்த விபத்தில் தாத்தாவுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments