Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 ஆயிரம் பேர் வேலை காலி; டிஸ்னி எடுத்த முடிவு! – அதிர்ச்சியில் பணியாளர்கள்!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (09:04 IST)
உலகின் பிரபலமான பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி தனது நிறுவனத்தில் இருந்து 7 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கார்ட்டூன் திரைப்படங்கள், லைவ் ஆக்‌ஷன் திரைப்படங்கள், தொலைக்காட்சி கார்ட்டூன் தொடர்களை உருவாக்கி வரும் நிறுவனம் வால்ட் டிஸ்னி. டிஸ்னி கதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட டிஸ்னி லேண்ட் என்னும் பொழுதுபோக்கு பூங்கா உலகின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. ஆனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையின் தாக்கம் டிஸ்னிக்கும் பரவ தொடங்கியுள்ளது.

எதிர்பார்த்த லாப இலக்கை அடைய முடியாதது, அதிகரிக்கும் இதர செலவுகள் ஆகியவை காரணமாக தனது பணியாளர்களில் 7 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரலில் மட்டும் 4 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான பணிநீக்க பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது டிஸ்னி நிறுவன பணியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments