Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கப்பலை அட்டாக் பண்ணா ஈரான் பணத்தில் கை வைப்போம்!. டிரம்ப் வார்னிங்!..

Advertiesment
iran hormuz
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது எனக்கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடந்த பிப்ரவரி மாதம் போரை துவங்கியது. அந்த போர் தற்போது வரை நின்றபாடில்லை. போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை கப்பல் வழியாக கொண்டு வர முடியவில்லை..

சமீபத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் ஹார்மூஸ் நீரிணை வழியாக வரும் கப்பல்களை ஈரான் தொடர்ந்து தாக்கி வருவதால் கோபமடைந்த அமெரிக்கா இனிமேல் ஈரானுடன் பேச்சு வார்த்தை இல்லை. ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம்.. ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்களை தாக்குவோம் என அறிவித்தது..

ஆனாலும் ஈரான் பின் வாங்கவில்லை.. தொடர்ந்து ஹார்மூஸ் நீரிணை வழியாக வரும் கப்பல்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனாட்ல் டிரம்ப் ‘இனிமேல் கப்பல்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அமெரிக்கா வசமுள்ள ஈரானின் பணத்தை பயன்படுத்த போகிறோம் என அறிவித்திருக்கிறார்.கப்பல்கள், சரக்குகள் மற்றும் அது தொடர்பான சேதங்களுக்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானின் பணத்திலிருந்து செலவு செய்யப்படும்.. அதுவே நியாயம்’ என கூறியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் பிரச்சனையை வைத்து மதக்கலவரத்தை தூண்டும் பதிவுகள்.. பாகிஸ்தானின் 480 சமூக வலைத்தள கணக்குகள் முடக்கம்...