Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

Advertiesment
earthquake

Mahendran

, வியாழன், 17 ஏப்ரல் 2025 (14:26 IST)
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று  மதியம் 12.02 மணியளவில், மியான்மரின் பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அலறியடுத்து ஓடியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலநடுக்கத்தால் இழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை. ஆனால், இது அடிப்படியில் மிக ஆழமில்லாத அதிர்வாக இருந்ததால், பின்னடைவு அதிர்வுகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், மிதமான ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் நேரடியாக நிலத்தளத்தில் தாக்கம் ஏற்படுத்துவதால், பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும்.
 
இதேபோல், நேற்று  அந்நாட்டில் 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாளே மீண்டும் நிலம் குலுங்கியது மக்களிடையே பரபரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்குமுன், மார்ச் 28 அன்று அந்நாட்டில் 7.7 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. அதன் விளைவாக லட்சக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து, பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தது பெரும் கவலையை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?