Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஆண்டில் மனிதர்களை தூக்கி ஏஐ சாப்பிட்டுவிடும்: எலான் மஸ்க் எச்சரிக்கை..!

Siva
வியாழன், 14 மார்ச் 2024 (07:24 IST)
செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் நுழைந்து வரும் நிலையில் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என்றும், அது மட்டுமின்றி ஏற்கனவே பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்களின் வேலை பறிபோய் கொண்டு இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

10 அல்லது 20 ஊழியர்கள் ஓரு நாள் முழுவதும் செய்யும் ஏஐ தொழில்நுட்பம் ஒரு சில நிமிடங்களில் செய்து கொடுத்துவிடுகிறது என்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணியை முடிக்கவே விரும்புகின்றனர்

ஏஐ  தொழில்நுட்பம் குறித்த ரோபோவும் வந்துவிட்டதால் வேலைவாய்ப்பு திண்டாட்டம் உலகம் முழுவதும் மிக தீவிரமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் ஒரே ஆண்டில் மனிதர்களை மிஞ்சும் அறிவாற்றலை ஏஐ பெற்று விடும் என்றும் மனிதர்களை தூக்கி சாப்பிட்டு விடும் என்றும் எலான் மஸ்க் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அடுத்த ஆண்டில் சாதாரண நபர்களை ஏஐ மிஞ்சிவிடும் என்றும் உலகில் இருக்கும் அனைத்து நபர்களையும் மிஞ்சும் அளவுக்கு 2029 ஆம் ஆண்டுக்குள் ஏஐ  எட்டிவிடும் என்றும் நம்மிடம் இருக்கும் ஏஐ தொழில்நுட்பம் அந்த அளவுக்கு தீவிரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாதத்திற்கும் மேல் குளிக்காத கணவர்.. திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கேட்ட மனைவி..!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது லாரி மோதியதால் கை முறிவு: அன்புமணி கண்டனம்..!

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் திமுக.. யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயில் சேவை! கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: தீவிரம் காட்டும் மத்திய அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments