உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் திடீரென 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்ட நிலையில் அவர் அந்த பணத்தை வைத்து டுவிட்டரை விலைக்கு வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரை டுவிட்டரை விலைக்கு வாங்குவதில் இருந்து திடீரெனப் பின்வாங்கினார்
இந்த நிலையில் தற்போது மீண்டும் 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது
கஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு இடையில் அவர் விற்பனை செய்த பங்குகளின் எண்ணிக்கை 79 லட்சத்துக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது .திடீரென தனது நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது