Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

Mahendran
சனி, 29 மார்ச் 2025 (13:50 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் தலைசிறந்த சமூக ஊடகத் தளங்களில் ஒன்றாக இருந்த டிவிட்டரை, பிரபல தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் உரிமையாளருமான எலான் மஸ்க் வாங்கினார். பின்னர், அவர் அதன் பெயரை "எக்ஸ்" என மாற்றி, பல உயர்நிலையான ஊழியர்களை நீக்கி, அந்த தளத்தின் செயல்பாடுகளில் பல முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டார்.
 
இந்நிலையில், எலான் மஸ்க் தனது "எக்ஸ்" நிறுவனத்தை ரூ. 2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் இது வெளி நிறுவனத்திற்கு அல்ல; மாறாக, அவரே உருவாக்கிய X AI நிறுவனத்திற்கே இந்த விற்பனை செய்யப்பட்டுள்ளது. X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) மையமாக செயல்பட்டு வருகிறது.
 
அதன்முன், "எக்ஸ்" தளத்தில், X AI உருவாக்கிய 'குரோக் 3' (Grok 3 AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் அறிமுகமானது. அது பயன்படுத்துபவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

இன்று ஒரே நாளில் 920 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

மெட்ரோ பணிகள் முடிந்தது.. சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments