Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 மாணவிகளின் தலையை மொட்டையடித்த ஆசிரியர்: மன்னிப்பு கோரிய பள்ளி நிர்வாகம்..!

மாணவிகள்
Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (15:02 IST)
இந்தோனேசியாவில் 14 மாணவிகளின் தலையை மொட்டை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தோனேசியா நாட்டில் பெண்கள் பள்ளி ஒன்றில் ஹிஜாபை சரியாக அணியவில்லை என்று கூறி 14 மாணவிகளின் தலையை பள்ளி ஆசிரியர் மொட்டை அடித்ததாக தெரிகிறது. 
 
இந்த சம்பவம் மாணவிகளின் பெற்றோர் தரப்பில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. மேலும் பள்ளி நிர்வாகி இடம்   ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
மேலும் மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹிஜாபை சரியாக அணியவில்லை என்பதால் 14 மாணவிகளின் தலையை மொட்டை அடித்த  விவகாரம் இந்தோனேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments