Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இலங்கையில் ’குண்டுகள் நிரப்பிய லாரி ’ ஊடுருவல் : பதற்றம் அதிகரிப்பு

இலங்கையில் ’குண்டுகள் நிரப்பிய லாரி ’  ஊடுருவல் : பதற்றம் அதிகரிப்பு
, செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (15:56 IST)
இலங்கைக் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு உதவ தயாராக இருப்பதாக இண்டர்போல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்குண்டுவெடிப்பு பற்றி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்தததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக என்று தெரிவித்தது. இந்நிலையில் தற்போது குண்டுகள் நிரப்பிய வாகனம் ஒன்று இலங்கையில் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வெளியானதால் அரசு எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 295 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இன்று இலங்கையில் தேசிய துக்க தின நாள் அனுசரிக்கப்படவிருக்கிறது.
 
இந்த குண்டுவெடிப்பு சம்மந்தமாக விசாரணை நடத்த சிறப்புக்குழுவை அதிபர் மைத்ரிபால சிறிசேன அமைத்துள்ளார். அந்த குழுவில்  உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் மலால்கோடா, முன்னாள் போலீஸ் ஐஜி என்.கே.இலங்கக்கூன், சட்டம் - ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இந்த குழு விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
webdunia
இந்த குழு விசாரணை மேற்கொள்ள இருக்கும் வேளையில் இண்டர்போல் அமைப்பு தனது கணடனத்தைப் பதிவு செய்ததோடு விசாரணைக்குத் தேவையான உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளது. இது தொடர்பாக சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

அந்தக்குழு குண்டுவெடிப்பு சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மற்றும் பகுப்பாய்வு செய்வது ஆகியப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அதற்காக சிறப்பு நிபுணர்கள் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என அறிவித்தது.
 
கொழும்பு நகருக்குள் வெடிகுண்டு நிரப்பட்ட லாரி வேன் நுழைந்ததாக தகவல் வெளியானதால் பதற்றம் நிலவுகிறது.  புலனாய்வுப்பிரிவுக்கு வந்த தகவலை அடுத்து எல்லா இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் தற்போது கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் இதுர்வரை நடந்த குண்டுவெடிப்பில் 45 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியுசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிக்குப் பழியா ? – இலங்கை அமைச்சர் புதுத்தகவல் !