Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவும் சீனாவும் எங்கள் முக்கிய கூட்டு நாடுகள்: பகிரங்கமாக அறிவித்த ரஷ்யா..!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (10:24 IST)
இந்தியாவும் சீனாவும் எங்களுடைய முக்கிய கூட்டணி நாடுகள் என்று ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் சீனா மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகிறது என்றும் போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய முக்கிய கூட்டணி நாடுகள் என ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு  கொள்கை குறித்த 42 பக்க அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் அந்த அறிக்கையில் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் போருக்கு பின்னர் இந்தியாவும் சீனாவும் ராணுவ ரீதியாகவும் அரசு ரீதியிலும் உறவுகளை தொடர்ந்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பாதுகாப்பு, சிவில், அணுசக்தி, தீவிரவாத எதிர்ப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் அரசியல் ஆகிய உறவுகளில் இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு ஒத்துழைப்பை தந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments