கனடாவில் செயல்பட்டு வரும் பேக்கரியின் அடுப்பில் இருந்து 19 வயது இந்திய சீக்கிய பெண் ஒருவரின் சடலம் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் பணிபுரிந்து வந்த இந்திய சீக்கிய பெண் ஒருவர், பல்பொருள் அங்காடியின் பேக்கரியில் இருந்த அடுப்பிலிருந்து கடந்த 19 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை விரைவில் கண்டறியுமாறு, சீக்கிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கனடா முழுவதும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், இது தொடர்பாக யாரும் வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் கனடா காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு வால்மாட் நிறுவனம் இரங்கல் தெரிவித்த நிலையில், "எந்த நிலையிலும் விசாரணைக்கு உடனிருப்போம்" என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்தியாவுக்கும் கனடாவுக்கும் உறவு நிலை விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்திய பெண்ணின் மர்ம மரணம் இருநாட்டு உறவில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.