Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹோர்மூஸ் நீரிணை கடக்க கப்பலுக்கு ரூ.18.5 கோடி. ஈரான் அறிவிப்பு!.. பொருட்கள் விலை ஏறுமா?...

Advertiesment
iran
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடங்கியதால் கோபமடைந்த ஈரான் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் கப்பல்கள் வரும் கடல் வழி பாதையான ஹார்மோஸ் நீரிணையை மூடிவிட்டது. ஏனெனில் அந்த கடல் பாதை ஈரானுக்கு சொந்தமாக இருக்கிறது.

இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு வர முடியாததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு ஹோட்டல்களில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் கிடைக்காமல் போனது. இதனால் பல ஹோட்டல்களும் மூடப்பட்டது.. சில தனியர் பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிவிட்டது.

கடந்த சில நாட்களாகவே ‘ஈரான் ஹோர்மூஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும்.. இல்லை என்றால் அந்த நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வந்தார். ஆனால் ஈரான் அடிபணியவில்லை.. அதேநேரம், நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் ஹோர்மூஸ் ஜலசந்தியை திறக்கவேண்டும் என்கிற நிபந்தனையோடு இன்னும் இரண்டு வருடங்களுக்கு போர் நிறுத்தம் என அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

ஈரானின் இந்த முடிவால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் சுலபமாக வந்துவிடும் என்பதால் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கிவிடும் என வணிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், ஹோர்மூஸ் நீரிணையை கடக்க ஒரு கப்பலுக்கு இந்திய மதிப்பில் ஒரு 18.5 கோடி வசூலிக்க ஈரான் திட்டமிட்டிருக்கிறது.. போர் இழப்பீட்டை ஈடு செய்ய வசூலிக்கப்படும் இந்த கட்டணத்தை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்வோம் என ஈரான் அறிவித்திருக்கிறது. கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்பது ஈரானின் போர் நிறுத்த நிபந்தனைகளில் இடம்பெற்றுள்ளது.

இப்படி ஈரான் கடல் வழியாக வரும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலித்தால் கப்பலில் கொண்டுவரப்படும் பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெப்போ வட்டி விகிதத்தில் என்ன மாற்றம்? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!