Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கமலா ஹாரிஸ் மன்னார்குடின்னா.. நான் சென்னைக்காரன்! – அதிர்ச்சியளிக்கும் ஜோ பிடன்!

கமலா ஹாரிஸ் மன்னார்குடின்னா.. நான் சென்னைக்காரன்! – அதிர்ச்சியளிக்கும் ஜோ பிடன்!
, திங்கள், 9 நவம்பர் 2020 (09:58 IST)
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் தனது முன்னோர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று முன்னாள் ஒரு பேட்டியில் கூறியிருந்தது தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ்தான் இந்தியாவில் பேசுபொருளாகியுள்ளார். அவரது பூர்வீகம் தமிழகத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் என்பதால் அவர் வெற்றி பெற வேண்டுமென துளசேந்திரபுரத்தில் சிறப்பு பூஜைகள் கூட நடத்தப்பட்டன.

இந்நிலையில் ஜோ பிடனின் முன்னோர்களும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்ற செய்தி மேலும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 1972ல் செனட் உறுப்பினராக ஜோ பிடன் பதவியேற்றபோது இந்தியாவிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. பிடன் என்ற அவர்களது குடும்ப பெயரிலேயே முடிந்த அந்த கடிதத்தில் இருவரது முன்னோர்களும் ஒருவரே என்றும், முந்தைய காலத்தில் பிடன் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியா வந்தடைந்ததுமாக அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
webdunia

சில வருடங்கள் கழித்து இது குறித்து ஒரு விழாவில் பேசிய ஜோ பிடன் “எனது மூதாதையர்களில் ஒருவரான ஜார்ஜ் பிடன் ஒரு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி கேப்டனாக செயல்பட்டு இந்தியா வந்தடைந்து அங்கேயே வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஜார்ஜ் பிடன் என்ற பெயரில் கிழக்கிந்திய கம்பெனியில் யாரும் இருந்தார்களா என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லையாம்.

அதே சமயம் பிடன் என்ற பெயரில் முடியும் ஒருவர் முந்தைய மெட்ராஸுக்கு வந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. க்ரிஸ்டோபர் பிடன் என்னும் அவர் சென்னையில் வாழ்ந்து இறந்ததற்கான நினைவு சின்னமும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோ பிடனின் முன்னோர்கள் பற்றிய இந்த தியரி வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேங்க்ல இருந்து பேசறோம்.. இந்தா ஆப்-ஐ டௌன்லோட் பண்ணுங்க! – 9 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல்!