Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க விசா கட்டுப்பாடுகளை திரும்ப பெற்ற ஜோ பிடன்! – இந்தியர்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (08:36 IST)
அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பால் விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகளை நடப்பு அதிபர் ஜோ பிடன் திரும்ப பெற்றார்.

அமெரிக்காவில் வேறு நாட்டினர் நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கி பணிபுரிய எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு, அமெரிக்காவில் வேலையிழப்பு ஆகியவற்றை காரணம் காட்டி அன்றைய அதிபர் ட்ரம்ப் எச்1பி விசா மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.

ட்ரம்ப்பின் ஆட்சியில் வெளியுறவு கொள்கைகள் மோசமடைந்திருப்பதாக தெரிவித்திருந்த நடப்பு அதிபர் ஜோ பைடன் தான் அதிபர் ஆனதும் பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என கூறியிருந்தார். அந்த வகையில் எச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அவர் திரும்ப பெற்றுள்ளார். இதனால் பலர் நிம்மதியடைந்துள்ளனர். எச்1பி விசா மூலமாக இந்தியர்கள், சீனர்கள் அதிகமாக அமெரிக்காவில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments