இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சி எம்பிக்கள் திடீரென போர்க்கொடி தூக்கி இருப்பது கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு ஒன்று உள்ளது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சி எம்பிக்கள் 24 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது,, வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடையும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளதால் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி எம்பிக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து, ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் சொந்த கட்சி எம்பிக்கள் 24 பேர் தெரிவித்துள்ளனர். மேலும், ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக 28ஆம் தேதி வரை கெடு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் நடந்த லிபரல் கட்சியின் கூட்டத்தில் ஜஸ்டின் ராஜினாமா செய்ய வேண்டுமென அவரது முன்னிலையே கடிதம் வாசிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.