Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வானில் திடீரென தோன்றும் வண்ண ஒளிகள்:ஏலியனா என்று சந்தேகம்

வானில் திடீரென தோன்றும் வண்ண ஒளிகள்:ஏலியனா என்று சந்தேகம்
, வெள்ளி, 21 ஜூன் 2019 (16:42 IST)
நார்வே நாட்டில் வானில் அடிக்கடி தோன்றும் வண்ண ஒளிகள், ஏலியனால் உருவாக்கப்படுகின்றனவா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள நார்வே நாட்டில், சில பகுதிகளில் வானத்தில் பல வண்ணங்களில் ஒளிகள் வருவதும் போவதுமாக இருக்கின்றன.

இந்த ஒளியானது வாரத்திற்கு 15 முதல் 20 முறைகள் தோன்றி மறைகின்றன என்றும் கூறப்படுகின்றது. திடீரென தோன்றும் இந்த வண்ண ஒளிகளை அறிவியலாளர்கள் ஹஸ்டாலன் ஒளி என்று அழைக்கிறார்கள்.

இந்த ஒளியானது வெள்ளை, மஞ்சள், சிகப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில், பல்வேறு வடிவங்களிலும் தோன்றுகின்றன.
webdunia

இந்த ஒளி, அந்த பகுதியிலுள்ள பாறை மற்றும் நதியிலிருந்து வரும் ரேடான் அணுப்பிளவினால் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அந்த ஒளிகளை வேற்று கிரகவாசிகள் தான் உருவாக்குகின்றனரா? என்று நார்வே நாட்டினர் பலர் சந்தேகித்து உள்ளனர்.

உலகில் கடந்த 50 ஆண்டுகளில் வேற்றுகிரக வாசிகள் வருகைக்கான பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனாலும் அதெல்லாம் போலி ஆதரங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றன.

எனினும் இது போன்ற ஆச்சரியமான நிகழ்வுகள், நம்முடைய இயற்கையால் நிகழ்த்தப்படுகின்றன என்றும், இதை விட நம் அறிவுக்கு எட்டாத பல விஷயங்கள் இந்த பூமியில் நிகழ்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்குத் தினமும் தண்ணீர்… 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !