Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (11:44 IST)
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை: என்ன காரணம்?
தென் ஆப்பிரிக்கா நீதிமன்றத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள கருப்பர்களின் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர் மகாத்மா காந்தி என்பது தெரிந்ததே. அவருடைய கொள்ளுப்பேத்தி தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் சுங்க வரி இல்லாமல் பொருள்களை இறக்குமதி செய்து தருவதாக கூறி ரூபாய் 3 கோடியே 33 லட்சம் லஞ்சம் பெற்றதாக தெரிகிறது 
 
இது குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
நேர்மையின் சிகரமாக இருந்த மகாத்மா காந்தி பெயருக்கு களங்கம் வரும் வகையில் அவருடைய கொள்ளுப்பேத்தி நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments