Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசஞ்ச நேரத்துல ஆபாசமா வீடியோ எடுக்கறதுதான் பொழப்பே... பிடிப்பட்ட மகா மட்டமான ஆள்!

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (12:47 IST)
கொலம்பியாவில் பெண்களை ஆபாசமாக படம்பிடிப்பதும் அதை இணையத்தில் பதிவிடுவதையுமே ஒருவன் பிழைப்பாக வைத்துள்ளான். 
 
கொலம்பியாவை சேர்ந்த 53 வயதான ஒருவன் இளம் பெண்களை திருட்டுதனமாக வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் பதிவிடுவதையே வேலையாக வைத்திருந்துள்ளான். இவன் மீது எழுந்த சில புகார்களால் போலீசார் இவனை கண்காணித்து சமீபத்தில் கையும்களவுமாக பிடித்துள்ளனர். 
 
இவனது மோசமான செயலை பற்றி போலீஸார் தெரிவித்ததாவது, ஒரு வருடமாக மெட்ரோ, சூப்பர் மார்கெட் ஆகிய இடங்களில் பெண்களை பின்தொடர்ந்து தனது பைக்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளான். 
 
சுமார் 550-க்கும் மேற்பட்ட பெண்களை இப்படி ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளான். அதில் 283 பெண்களின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி லட்சக்கணக்கான வியூஸை பெற்றுள்ளான். 
 
மேலும், அவனது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் லேப்டாப், ஹார்ட் டிரைவ்கள் என அனைத்திலும் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments