Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதி மன்னர் - மோடி செய்து கொண்ட ரூபே கார்ட் ஒப்பந்தம்!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (21:28 IST)
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு டெபிட் கார்டாக ரூபே கார்ட் கொடுக்கப்பட்டு வருவது தெரிந்ததே. ரூபே கார்டு என்பது இந்திய தேசிய கட்டண நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு கட்டண அட்டை திட்டமாகும்.
 
இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவெனில் இந்திய ரிசர்வ் வங்கியின் விருப்பமான உள்நாட்டு, திறந்தநிலை, பன்முக கட்டண அமைப்பை ஏற்படுத்துவதாகும். ரூபே அனைத்து இந்திய வங்கிகளுக்கும், நிதி நிர்வாகங்களுக்கும் மின்வழி நிதி மாற்றம் வசதியை அந்நிய நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டுக்கு மாற்றாக அளிக்கிறது. மேலும் ஒருசில உலகளாவிய அமைப்புடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகளாவிய நிதி மாற்றம் என்ற வசதியை இந்த ரூபே கார்ட் அளிக்கிறது.
 
இந்த நிலையில் ரூபே கார்டை, சவுதி அரேபியாவில் சுற்றுலா மற்றும் புனித யாத்திரை செல்லும் இந்தியர்கள் வசதிக்காக, பிரதமர் மற்றும் சவுதி மன்னர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து இனி சவுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் ரூபே கார்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments