Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு: ஆண்ட்ராய்டு குறித்து பில்கேட்ஸ்

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (08:22 IST)
ஆண்ட்ராய்டு நிறுவனத்தை கைப்பற்ற முடியாதது நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பில்கேஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
 
ஆண்ட்ராய்டு நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு விலைக்கு வந்தபோது கூகுள் நிறுவனம் அந்நிறுவனத்தை 347 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஆண்ட்ராய்டு முதலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸைத்தான் அணுகியது. ஆனால் அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தால் ஆண்ட்ராய்டு நிறுவனத்தை வாங்கும் முயற்சியை கைவிட்டது. இதனையடுத்தே கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு நிறுவனத்தை பெற்றது. கடந்த 15 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற ஆண்ட்ராய்டு நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 27 லட்சத்து 76 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் தனது நேரத்தை செலவிட்டதும், ஆன்ட்ராய்டை கவனிக்காமல் விட்டதும் தனது நிர்வாகத்தில் நடந்த மிகப்பெரிய தவறு என்று தெரிவித்தார். மேலும் ஆன்ட்ராய்டிடம் தோற்றதே தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக செயல்பட்ட விண்டோஸ் போன்கள் கடந்த 2017ஆம் ஆண்டு தயாரிப்பு நிறுத்தப்பட்டு போட்டியில் இருந்து விலகிவிட்டது என்பதும் தற்போது ஆண்ட்ராய்டு தனிக்காட்டு ராஜாவாக கோலேச்சி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments