ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவரான சாரா கில்பர்ட் ஒமிக்ரான் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஒமிக்ரான் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைய தகவல்களின்படி, இது மிகவும் வேகமாக பரவக் கூடியதாகவும் அதே நேரம் அதிக ஆபத்து இல்லாததாகவும் உள்ளது. ஆனால் கடந்த 2 வாரங்களில் மருத்துவமனையில் சேர்ந்தவர்களில் 80% 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை. எனவே ஒமிக்ரான் கொரோனா மற்ற உருமாறிய வைரஸ்களான டெல்டா, ஆல்பா போன்று ஆபத்தானது அல்ல. மக்களின் வாழ்வாதாரம் வைரஸ் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது இதுவே கடைசியாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. எனவே, அடுத்தடுத்த வைரசை எதிர்கொள்ள உலகம் தயாராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 23 பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.