கடவுளே எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள் என பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எம்பி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இந்தியா பதிலடியாக "ஆபரேஷன் சித்தூர்" என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனை அடுத்து பாகிஸ்தான் சாரமாக தாக்குதல் நடத்தியது என்பதும், அந்த தாக்குதல்கள் அனைத்தையும் இந்தியா முறியடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீவிரமான போர் விரைவில் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டின் எம்பி மற்றும் முன்னாள் ராணுவ மேஜர் தாஹிர் இக்பால் என்பவர், "கடவுளே எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த நேரத்தில் ஒன்றிணைய வேண்டும், கடவுளை வணங்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.