நம் எதிரிகள் கோழைத்தனமாக தாக்கினார்கள், ஆனால் நாம் வென்று விட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர்ச்சூழல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் அந்நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் பேசினார்.
அப்போது, "பாகிஸ்தான் ஒரு மரியாதை மிக்க நாடு. நம்முடைய தேசத்தின் சுதந்திரத்திற்கு யாராவது சவால் விட்டால், அதை எதிர்கொள்ள என்ன வேண்டுமானாலும் நாம் செய்வோம்" என்றார்.
"கடந்து சில நாட்களாக எதிரிகள் நம் மீது கோழைத்தனமாக தாக்கினார்கள். பஹல்காம் தாக்குதலுக்கு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் கூறியபோதிலும், பாகிஸ்தான் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை எதிரிகள் சுமத்தினார்கள்.
அவர்களால் முடிந்த அளவுக்கு நம் மீது தாக்கினார்கள். மசூதி உள்பட மதிப்புமிக்க இடங்களை தாக்கிய நிலையில், நாம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.
நாம் வரலாறு படைத்திருக்கிறோம். நாம் வென்றிருக்கிறோம். வரலாறு நன்மை ஞாபகப்படுத்தும்" என்று பேசினார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.